அசோகனின் வைத்தியசாலை
குதிரைக்கும் வயிற்று வலிவரும். அதற்கும் மருத்துவ சிகிச்சை இருக்கிறது. எப்பொழுதும் மனிதர்களைப் பற்றியசித்திரங்களைத்தரும் இலக்கியப்படைப்புகளைபடித்துவரும் எமக்கு நடேசனின் அசோகனின் வைத்தியசாலை தொடர்கதை புதியவாசக அனுபவங்களைத் தருகிறது.
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றிஉரத்துப்பேசுபவர்கள் அடிக்கடிஉதிரும் குற்றச்சாட்டுவார்த்தைகள்: “எம்மவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு தாயகம் பற்றிய கதைகளைத்தான் பின்னுகின்றார்கள்.”
நடேசனின் தொடர்கதைஅவர்களுக்கு நல்லதொரு பதிலைத் தருகிறது. இத்தொடரில்சுந்தரம்பிள்ளை மாத்திரமே தற்போதைக்கு ஒருதமிழ்ப் பாத்திரமாகவருகிறார். ஏனையவர்கள் அனைவரும் வெள்ளை இனத்தவர்கள். அவுஸ்திரேலியாவாசிகள்.
நடேசன் ஒருமிருகவைத்தியர் என்பதனால் அவரது தொழில்சார்ந்த அனுபவங்கள் இந்தத்தொடரில் விரவிக்கிடக்கின்றன. அதனால் நாமும் புதியகளங்களை சந்திக்கின்றோம்.
சிலவார்த்தைகளைபடிக்கும்பொழுது,சற்று நின்று தாமதித்து மீண்டும் பார்த்துவிட்டுகடக்கின்றோம். சிலகணங்கள் அந்த வார்த்தைகள் யோசிக்கவைக்கின்றன.
உதாரணத்துக்குசில:
கண்களால் புணர்தல்.
மருந்துக்கும் அவள் உடலில் கொழுப்பு இல்லை.
காமத்தைஅடக்கியஆண்களின் மனதில் வக்கிரம் கலந்த சிந்தனை.
இப்படிபல. இலங்கையையோஅல்லது இந்தியாவையோ பிறந்தநாடாகக்கொண்டிருந்துவெளிநாடுகளில் வதியும் வாசகர்கள் படைப்பாளிகளுக்குஅசோகனின் வைத்தியசாலை மாறுபட்டவாசிப்புஅனுபவத்தை வழங்கும் எனநம்புகின்றேன்.
ஒருபடைப்பைபடைக்கும் எழுத்தாளனுக்குபடைப்புபயிற்சி எவ்வளவுஅவசியமோ அதேஅளவு வாசகப்பயிற்சிவாசகர்களுக்கும் இருக்கவேண்டும்.
