Quantcast
Channel: Noelnadesan's Blog
Viewing all articles
Browse latest Browse all 736

அமரிக்காவில் தேர்தல்

$
0
0

trump

நடேசன்
இதுவரை காலமும் அமரிக்காவில் ஐனாதிபதியாக வந்தவர்களுக்குப் பின்புலமாக அமரிக்க பெரும் கம்பனிகள், ஆயுதவிற்பனையாளர் மற்றும் ஊடகங்கள் இருப்பார்கள். ஆனால் இம்முறை அப்படிப்பட்டவர்கள் தோற்ற ஹிலரி கிளின்ரனுக்கு பின்பலமாக இருந்ததுடன் அவருக்கு ஏராளமான பணமும் கொடுத்திருந்தார்கள். இந்த வகையில் சாமானிய மக்களால் டொனால்ட் ஜனாதிபதியாக்கப்பட்டது ஒருவித ஜனநாயகப் புரட்சியாகும்.

டோனால்ட் ரம் இதுவரைவந்த குடியரசுக்கட்சிகாரர்போல் அவர்களது கட்சியை சேர்ந்தவர் அல்ல. ஒரு விதமான கருத்தியலிலும் மாட்டிக்கொள்ளாதவர். அதேநேரத்தில் தனக்கு சரி எனப்படுவதைச் செய்யக்கூடியவர் அதாவதுஆங்கிலத்தில் பிறக்மட்டிக் மான் ( Pragmatic man ).

எட்டு வருடங்கள் முன்பாக 13 வீதமான கறுப்பு இனத்தவர்களைக் கொண்ட அமரிக்கா பரக் ஒபாமாவை தங்களது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். அமரிக்கர்களில் ஏராளமானவர்கள் இன வேறுபாடு கடந்து வராமல் இருந்தால் இது நடந்துதிராது. இம்முறை அவர்களில் ஏராளமானவர்களே டொனாலட் ரம்மை தெரிவு செய்திருக்கிறார்கள்.
அவரது தனிப்பட்ட குறைகளைப் புறந்தள்ளி, எந்த ஒரு அரசியல் அனுபவம் இல்லாதவர் என அறிந்து ஆனாலும் தங்களது பிரச்சனைகளைப் பேசும் மனிதரென நம்பிருக்கிறார்கள்.

இதற்கான காரணம் என்ன?

கொள்கை ரீதியாகப் பார்க்கும்போது முதலாளித்துவத்தின் மூலமான முதலை வைத்துக் கடந்த இரண்டு நூற்றாண்டுகாலமாகப் பெரிய கம்பனிகள் உருவாகி அதனால் சுபீட்சமடைந்த அமெரிக்காவில் கடந்த கால் நூற்றாண்டுகளாக நடக்கும் பூகோளமயமாக்கத்தால் அமரிகாவின் பெரிய கம்பனிகள் மற்றைய நாடுகளில் தொழில் தொடங்குவதுடன் வேறுநாடுகளில் பணத்தை வைத்துள்ளார்கள் உதாரணம் :அப்பிள் கம்பனி 250 பில்லியன டாலர் ஐயர்லாந்தில் உள்ளது இதேபோல் 500 பெரிய அமரிக்காவின் பெரிய கம்பனிகள் 2.5 ரில்லியன் பணத்தை முதலிடாமல் வைத்துள்ளார்கள் அல்லது வேறு நாடுகளில் முதலிடக் காத்திருக்கிறார்கள்.

அமரிக்காவில் பொருளீட்டுவதற்கு அதிக செலவாகும். அப்படி ஈட்டிய இலாபத்திற்கு அமரிக்க கொம்பனி வரி 35% (ஐயர்லாந்து 12.5 %சிங்கப்பூர் 17%) இதன் விளைவு அமெரிக்காவில் தொழிலாளர்கள் வேலையற்று இருக்கிறார்கள்

இதேபோல் அமரிக்க விவசாயிகளது சோயாபீன், கரும்பைவிட விட பிரேசிலில் மலிவாக உற்பத்தி செய்வார்கள்.ஆஜின்ரீனாவில் மலிவாக மாடு வளர்த்து அமரிக்காவுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யமுடியும். ஆனால் அமரிக்காவில் நன்றாக நடக்கும் தொழில்களாகக் கப்பல், கார் ஆகாயவிமானம் செய்தல் என அதிதொழில் நுட்பம் உள்ளவற்றிற்கு மிகவும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் ரோபோக்களும் தேவை. கடைசியாக இந்த சொப்ட் வெயர் வந்த பின்பு திடீர் எனப் பலர் பணக்காரராக முடியும்.
புதிய தொழில் நுட்பத்தால் பயன் அடைந்தவர்கள் அமரிக்காவின் கிழக்கு பகுதியிலும் மேற்குப்குதியிலும் இருக்கும்வேளையில் தொடர்ச்சியாக வேலை வாய்ப்யு குறைவுடன் குறைந்த வருமானம் பெறும் பகுதியாக மத்திய அமரிக்கா மற்றும் சிறுநகரங்களில் வாழ்பவர்கள்.

2009ல் அமரிக்காவில் பெரிய கம்பனிகள் பாங்குகள் நட்டமடைந்தபோது அரசாங்கம் அவர்களுக்கு வரிப்பணத்தைக்கொடுத்து காப்பாற்றியது. இப்படியான ஒரு நிலைக்கு உருவாக்கியவர்களுக்கு எதுவித தண்டனையும் அளிக்கவில்லை. அமரிக்காவின் டாலரை அதிகமாக அச்சிட்டும், காசு வட்டிவிகிதத்தை பூச்சியமாக்கியதன் மூலம் யார் பயனடைந்தார்கள்?

அரசாங்கம் நினைத்தது மாதிரி உற்பத்தித்துறை வளரவில்லை ஆனால் சேவிஸ் செக்டர் எனப்படும் சிறிய கடைகள் மற்றும் சிறுதொழில்கள் நகரப்பகுதியில் வளர்ந்தது. கடந்த வருடம் அமரிக்கா சென்றபோது நகத்தை வெட்டும் ஏராளமான கடைகளை பிலடெல்பியா புறநகரில் பார்க்கமுடிந்தது. இவ்வளவு பேர் நகம் வெட்டுவார்களா என் ஆச்சரியப்பட்டேன். இப்படியான தொழில்களால் நகரத்தில் உள்ளவர்களுக்கு பயன் வேலைக் கிடைத்தது ஆனால் பெரும்பாலானவர்கள் வாங்கும்சக்தியை இழந்தார்கள்.

சில விடயங்களை பாராக் ஒபாமா செய்ய முனைந்தபோது அமரிக்க செனட்டிலும், மக்கள் சபையும் எந்தச் சட்டத்தையும் தடுத்தார்கள் கடந்த எட்டு வருடமும் ஏராளமான தடைகளை செய்தார்கள்.
இவை எல்லாவற்றையும் வாசிங்ரனில் உள்ளவர்கள் செய்வதாக சாதாரண மக்களுக்குப் பட்டது. அப்படியான பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானவற்றைத் தருவதாக அவர்களுக்குப் புரிந்த மொழியில் பேசினார் டொனால் ரம்.

என்னைப் பொறுத்தவரையில் வெளிநாட்டவர்கள், முஸ்லீங்கள், மற்றும் பெண்களைப் பற்றி பேசிய விடயங்கள் அமரிக்க மக்கள் பெரிதாக எடுக்கவில்லை. அமரிக்கர்களுக்குத் தெரியும் ஜோன் எவ் கென்னடியோ, பில் கிளின்டன்செய்யாதவற்றை டொனால்ட் ரம் செய்யவில்லை.

அமரிக்க ஊடகங்கள் ,அமரிக்க நிறுவனங்கள் ,செனட் என ஏராளமானவை டெனால் ரம்பை கால் இடராமல்பாதுகாக்கும். இருநூறுவருட அமரிக்க ஜனநாயகத்தில் டொனால் ரம்பால் ஓட்டை விழுவதற்கு சாத்தியமில்லை. தேர்தல்க்கால பேச்சுகள் பல காற்றில் கலந்துவிடும்.

தேவையில்லாமல் பல நாடுகளில் அமரிக்கா விரலை விட்டுத் தோண்டி விளையாடும்வேலையை மடானால்ட் ரம் குறைத்துக்கொள்வார் என நினைக்கிறேன்.

பாரசீகம், ரோமன், ஒட்டமான், பிரித்தானிய என பல சாம்ராச்சியங்கள் அகலக் காலை விரித்துச் செயல்பட்டு அதன் விளைவாகத் தனது வீரியத்தை இழப்பதை வரலாற்று எமக்குக் காட்டியுள்ளது. புவியில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்கில் அமெரிகர்கள் இராணுவம், கடற்படையை வைத்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து செய்யமுடியாது என்பதையும் இந்தத்தேர்தல் காட்டுகிறது

சிட்னி ATBC வானெலியில் பேசிய சாரம்



Viewing all articles
Browse latest Browse all 736

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!