Quantcast
Channel: Noelnadesan's Blog
Viewing all articles
Browse latest Browse all 736

ஹோமோ செக்சுவாலிடடி( Homosexuality)

$
0
0

என் எஸ் நடேசன்

xx
உடல்நலக் குறைவான பூனையொன்றை கொண்டு இரு இளைஞர்கள் வந்தார்கள். பூனையை பரிசோதித்து நோய்கான மருந்துகளை கொடுப்பதற்கு எனது நர்சான ஜேன் உதவினாள்.

எனது அறையை விட்டு இரு இளைஞர்கள் போனபின்பு ஜேன் என்னிடம் ‘ ‘What a waste ? ‘ ‘ என கூறினாள்.

அழகான இளைஞர்கள் இருவரும் Gays என புரிந்ததால், நான் பதில் கூற முன்பு எனது பின்னாலே இருந்து ஒரு குரல் கேட்டது.

‘ ‘They are not waste to each other ‘ ‘

என்னுடன் வேலைசெய்யும் ஒரு மிருக வைத்தியரான லாரனின் குரல் அது.

லாரன் ஒரு லெஸ்பியன் என்பது எல்லாருக்கும் தெரியும். ஜேன் தனது நாகரீகமற்ற வார்த்தைகளை எண்ணி வெட்கத்துடன் வெளியே சென்றுவிட்டாள்.

இதைத்தான் clash of sexuality என்பதோ ?

பலரால் சங்கடத்துடன் தவிர்க்கப்படுவதும், இதைப்பற்றி தெரியத் தேவை இல்லை அல்லது எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வராது என ஒதுக்கப்படும் விடயம் இந்த ஹோமோசெக்சுவாலிற்றி.

ஒரு தாய் தந்தையர் தொடர்ச்சியாக தங்கள் மகனுக்கு திருமணம் பேசி வந்தார்கள். மகனும் ஒவ்வொன்றாக தட்டிக் கழித்துக் கொண்டு வந்தான். இவ்விளைஞர் வேறு ஒரு ஆணுடன் வாழ்வதாக நான் கேள்விப்பட்டேன்.

இது மேற்கத்தையவர்களிடம் மட்டும் இடம் பெறும் விடயம் என ஒதுக்க சிலர் முயற்சித்தாலும் நமது வேலைத்தளங்களிலும் நண்பர்களிடையேயும் நடைபெறும் போது இதை எதிர்கொள்வது எப்படி எனத் தெரிய வேண்டும்.

சிட்னியில் வருடம் தோறும் நடக்கும் ‘ ‘மாடிகிராவ் ‘ ‘ என்னும் நிகழ்ச்சி உலகப் பிரசித்தி பெற்றது. பல நாடுகளில் இருந்து ‘ ‘தலயாத்திரை ‘ ‘ செல்வது போல் வருவார்கள். கடைசி நாளில் நடக்கும் அணிவகுப்புகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இந் நிகழ்ச்சி அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் (ABC) தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்படும். பல மில்லியன் டாலர் அன்னிய செலவாணி இந்த நிகழ்ச்சியால் அரசாங்கத்திற்குக் கிடைக்கிறது.

நான் வேலை செய்த இடத்தில் 3-4 பேர் அக்காலத்தில் விடுமுறை எடுத்து கொண்டு இதற்குச் செல்வார்கள்.

ஒருநாள் எனது வீட்டில் மாடிகிராவ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தோம்.

18வயதான எனது மகன் ‘”Disgusting ‘ ‘ என்றான்.

16வயதான எனது மகள் ‘ ‘That is fun ‘ ‘ ‘ ‘ என பதிலளித்தாள்.

‘இதை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும். ‘ ‘ – எனது மனைவி.

‘ ‘அவர்கள் தங்களின் உரிமையை நிலைநாட்டுகிறார்கள். ‘ ‘ நான்.

எங்கள் குடும்பத்தில் பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் இருப்பது போல் சமூகத்திலும் உள்ளது. ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் ஹோமோ செக்சுவாலிற்றி ஒரு குற்றச் செயலாகவும் இயற்கைக்கு புறம்பானதாகவும் நினைக்கிறார்கள். மலேசிய நாட்டு முன்னாள் அமைச்சர் அன்வர் ப்ராகிம் மேல் இந்த குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் வைத்திருக்கிறார்கள்.

அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் ஹோமோ செக்சுவாலிற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட இவர்களை அடித்தல், துன்புறுத்துதல் ஆகியன நடைபெறுகிறது.

Gay Bashing ஒரு விளையாட்டாக கருதுபவர்கள் உள்ளார்கள்.

எடின்பரோ விலங்குகாட்சி சாலையில் பென்குயின் பறவைகளுக்கு இடையில் ஆண் – ஆண் ஒன்றுகூடல் அவதானிக்கப்பட்டது. பசுமாடுகள் சினைப்பட வேண்டிய நேரங்களில் ஒன்றின் மேல் ஒன்று ஏறும் தன்மை செயற்கைமுறை சினைப்படுத்தலுக்கு உதவியாக இருக்கிறது.

இதுவரை கால ஆராச்சிகளில் 450 மிருக பறவை இனங்களுக்கிடையே ஹோமோ செக்சுவாலிற்றி நிகழ்வுகள் அவதானிக்கப்பட்டது.

ஆண் – பெண் (Heterosexuality) உறவு தவிர்ந்த மற்றவை விவிலிய நூலில் எதிர்க்கப்பட்டுள்ளது. நோவாவின் கதையில் கரைசேர்க்கப்பட்ட சகல உயிர்களிலும் ஆணும் பெண்ணும் இருப்பது காணமுடியும்.

இந்து சமய நூல்களில் ஆண் பெண் உறவுகள் முதன்மைப் பட்டிருந்தாலும் விவிலிய நூல் போன்ற இறுகிய தன்மை இருக்கவில்லை. பல உபகதைகளில் பெண்தன்மை உள்ள ஆண்களும், அலிகளும் வந்து போகிறார்கள். ஐயப்பன் கதை கூட இதற்கு உதாரணமாகும்.

சீன தேசக்கதை ஒன்றில் விசித்திரமான சம்பவம் சொல்லப்படுகிறது.

‘ ‘அரசனுக்கு அவசரமான அழைப்பு வந்த போது தனது தோளில் தூங்கும் இளைஞனின் தூக்கத்தை கலைக்க விரும்பாத அரசன் தனது தோளையே வெட்டிவிட்டு அரசசபைக்கு சென்றான். ‘ ‘

சில உடல்கூறு விஞ்ஞானிகள் ஹோமோசெச்சுவாலிட்டியில் ஈடுபடுபவர்களின் மூளையில் சில வித்தியாசங்கள் உண்டு என தெரிவித்தாலும் முடிவான பதில் கிடைக்கவில்லை.

வித்தியாசமானவர்களையும் அவர்களின் வித்தியாசத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை சமூகத்தில் ஏற்படுகிறது. சமூக மாற்றங்கள் சில நாடுகளில் வேகமாகவும் சில நாடுகளில் ஆமைவேகத்திலும் ஏற்படுகிறது. இதேவேளையில் அரைநூற்றாண்டுகளுக்கு முன்புதான் ஹிட்லர் ஜே ர்மனியில் யூதர்களையும், ஜிப்சிகளையும் ஹோமோ செக்சுவாலிடடியும் கொலை செய்தான் என்பதும் மறக்க முடியாது.

—-



Viewing all articles
Browse latest Browse all 736

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!