நடேசன்
பைபிளின் பழயகோட்பாடு மூவாயிரம் ஆண்டுகளின் முன்பாக உரைநடையில் எழுதப்பட்டுள்ளது இதற்காக பழய கோட்பாட்டை நாம் படிக்கத் தேவையில்லை குறைந்த பட்சமாக வேதாகமத்தில் உள்ள பத்துக் கட்டளைகள் பார்த்தால் நமக்குத் தெரியும். அவை வசனமாக எழுதப்பட்டுள்ளது. 2230 வருடங்களுக்கு முன்பான பிளட்டோவின் குடியரசுவில்(Republic)) சாதாரண உரையாடல்கள். உள்ளது. அதே போல் தமிழ் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு குரானைப் பார்த்தால் அதுவும் வசன நடையில் உள்ளது.
மேற்கூறிய முக்கியமான நூல்கள் முறையே ஹிப்ரூ, கிரிக்கம் ,மற்றும் அரபி என்ற தொன்மையான மொழிகளிகளில் எழுதப்பட்டது.
2500 வருடங்கள் பழமையான தமிழ் மொழியில் மட்டும் உரைநடை 18ம் நூற்றாண்டில் அச்சுயந்திரங்களுடன் வீரமாமுனிவரது வருகைக்காக காத்திருந்தது?
அதற்கு முன் தமிழ் உரைநடை இல்லையா ?
சங்ககால இலக்கிய காலத்தில் உரைநடையில்லை என எல்லோரும் சொல்கிறார்கள்.
சிலப்பதிகாரத்தில் உள்ளதாக பேராசிரியர் செல்வநாயகம் சொல்கிறார்
அதாவது செய்யுள் விதிகளுக்கு புறப்பாக இருப்பதால்போலும்?
கய லெழுதிய இமய நெற்றியின்
ஆய லெழுதிய புலியும் வில்லும்
நாவலத் தண்பொழின் மன்னர்
ஏவல் கேட்பாரா சாண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலிற்
அதேபோல் தொல்காப்பியத்தில்( காலம் 5ம் நூற்றாண்டு) உரைநடை குறிப்பிடுகிறார் என்பதற்கு ஆதாரமாக
பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
பாவின்றெழுந்த கிளவி யானும்
பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும
பொருளோடு புணர்ந்த நகைமொழியானு மென்
றுரைவகை நடையே நான்கென மொழிய
பாட்டிடை வைத்த குறிப்பினாலும் என்பதை தவிர்ந்து நாலு உரைநடை உள்ளது என்கிறார் தொல்காப்பியர்.
இதன்பின் 10 நூற்றாண்டில் இருந்து அக்கால செய்யுள் இலக்கியத்திற்கு உடை நடை எழுதும் காலமாகிறது
பரிமேலழகர் 14ம நூற்றாண்டில் திருக்குறள், பரிபாடல், திருமுருகாற்றுப்படை என்பவற்றிகு பொழிப்பெழுதுகிறார்
இப்படி உரைநடையில் நாம் பிந்தியதற்கு காரணம் என்ன?
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்படித்தவர்கள் ஏதென்சில் மடடும் 15 வீதமாக இருந்தனர். அதிக கல்வியறிவானவர்களாக கிரிக்கரே இருந்தனர். அதற்கு முக்கிய காரணம் கிரீக்க நகரங்களில் ஜனநாயகம் இருந்தது. மற்றய நாடுகளில் ஜனநாயகம் அற்றதால் மிகவும் குறைந்தவர்களே கல்வியறிவு பெற்றிருந்தனர். ரோம சாம்ராஜாத்தில் பெண்கள் முற்றாக கல்வியறிவற்றவர்கள். இதனாலலே பல மொழி பேசிய கிளியோபற்றா சீசரை கவர்ந்தாள்.
இந்த நிலையில், தமிழ் சூழலில் எத்தனைபேர் கல்வி அறிவுடன் இருந்தார்கள்?
மத, ஜாதி குலம் என்ற நிலஅடக்குமுறைகளை மீறி நிட்சயமாக மிகவும் குறைந்தவர்களே கல்வி பெற்றிருப்பார்கள்.
செய்யுள் இலக்கியம் ஒருவர் சொல்ல மற்றவருக்கு கேள்வி ஞானமாக கடத்தப்படுகிறது. வேதங்கள் உச்சரிக்கப்படுபோது அவை உச்சரிப்பாக மனத்தில் பதிகின்றன. இப்பொழுதும் அர்த்தத்தை தெரியாமல் நாம் எத்தனை இந்திப் பாடல்களை நினைவு வைத்திருக்கிறோம்?
எனது தாத்தா சொல்லிய காகம் அழுதால் பலன் சொல்லும் சாத்திரம் எனக்கு சிறுவயதிலே பாடமாகி இருந்தது. இதேபோல் வைத்தியம், சோதிடம் ஏன் மாட்டுவாகடமும் பாடல்களாக தலைமுறையாக கடத்தபடும்.
பரந்த கல்வியறிவற்றவர்கள் அற்ற நிலையில், அடுத்த சந்ததிக்கு கடத்த இப்படியான பாடல் இலக்கியமாக அக்காலத்தில் இலக்கியங்களை எமது முன்னோர்கள் தமது சந்ததியினருக்கு கடத்தினர்.
உரைநடை விருத்தியாகி நாவல்கள், சிறுகதைகாலத்தில் கவிதைகளுக்கு என்ன இடம் என நீங்கள் கேட்டால் அதற்கான பதிலுக்கு முன்பாக சமிபத்தில்எனது அனுபவம்- மெல்பேனில் தென்னாசிய சமுகக்தினரது கவிதை நிகழ்வை ஒழுங்கு செய்தவர்களில் நான் ஒருவன் . அப்போது வங்காள தேசத்திலும் பாகிஸ்தானிலும் இருந்த வந்த கவிஞர்களது கவிதைகளை வட இந்திய நண்பன்எனக்கு மொழி பெயர்ப்பு செய்தான். அவை மிகவும் அற்புதமாக இருந்து. அவன் சொன்னான் ‘இந்த நாடுகளில் எழுத்து சுதந்திரம் குறைவு. இங்கு கவிதை பலமான ஆயுதம் . அரசாங்கத்தினர் மற்றும தலைபான்கள் போன்ற தீவிரவாதிகளுக்கு புரியாது. அரசியலுக்கு கவிதை மிகவும் காத்திரமான ஆயுதம்’
இதை ஏன் சொல்கிறேன் என்னிறால் பாஸ்கரனின் முடிவுறாக முகாரியில் அரசியல் யுத்தம் இரண்டும் பாலும் தண்ணியுமாக கலந்திருக்கிறது.
பாலிலிருந்து தண்ணிரை பிரித்தால் அதற்கு பெயர் வேறு இல்லையா?
எனக்குப் பிடித்த கவிதையின் வரிகள்
புலம் பெயர்ந்தவர்களின் முகத்தில் குளிர்தண்ணீரால் ஊற்றியதுபோன்றது
போரின் புறக்காற்றைகூட
போர்த்திக் கொள்ளாத
கள்ளிச் செடிகூட
இங்கு
மேடையிட்டு
போர் முரசு கொட்டி
புகழ் சேர்க்கும்
விழுந்தாலும் முதுகில் மண்படவில்லை எனப் பெருமை பேசுகிறோம்.ஏதோ பாரதியின் கனவையும நினைவாக்க வெளிநாடு வந்தோம் எனவும் சிலர். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகளை சொல்லி வெளிநாட்டு மேடைகளில் மிதப்பார்கள்.
உண்மையில் இலங்கையில் மூன்று இனமக்களுடன் ஒன்றாக வாழமுடியவில்லை என்பதுதான் இங்கே உண்மை. கணியன் பூங்குன்றனாரை அவமானப்படுத்தி, நம்மை நாமே ஏமாற்றுவதில் வல்லவர்கள் நாம்
தேசம் கடந்தோம் புலம் பெயர்ந்தோம்
ஐ.நா வின் அகதிகளாய் ஆச்சு வாழ்க்கை
பாரதியின் கனவு நினைவாகுமென்று
பெருமைகளும் பேசுகிறோம் இங்கு நின்று
எமது சமூகத்ததால் மிக விரைவில் மறக்கப்பட்ட விடயம் சுனாமி. 32000 க்கு மேற்பட்டவர்களை காவு கொண்டது இந்தப் பிரளயம். ஆங்கிலத்தில் தேடினால் வரும் விடயங்கள் மிக மிக அதிகம். ஆனால் அது நம்மவர்களால் பார்கப்படவில்லை அதற்கு காரணம் இறந்தது கரையோரத்தில் வாழ்ந்த ஏழை மக்கள். மிகவும் இலகுவாக மறக்கக்கூடியவர்கள்தானே?
மண்வீடு கட்டி மடியில் கிடந்தார்கள்
ஏனென்று அறியு முன்னே
அபகரித்து சென்றுவிட்டாய்
பார்த்து மகிழ்நது சிரித்து நின்ற மறுகணமே
வாரி எடுத்து வாயினுள் போட்டுவிட்டாய்
நீமலடி வங்ககடலே நீ மலடி
சின்னஞ் சிறிசுகளின் அருமை நீ அறியாய்
காலை எழுந்து கட்டுமரமேறி
நாளெல்லாம் உன்தாலாட்டில் கிடந்தவர்கள்
ஏழை மீனவர்கள் என்ன கொடுமை செய்தார்கள்
உன்வயிற்றில் விளையாடி
வுளர்ந்துவிட்ட உன்பிள்ளைகளை
என்ன சொல்லி நீ அழைத்தாய்
சொல்லம்மா
இலங்கையில் ஆட்சிமாற்றங்கள் வரும் ஆனால் நிலமையை?
ஆட்சிமாறும்
ஆட்கள் மாறுவர்
நீலம் உரித்து
பச்சை பூசுவர்;
கடந்த 30 வருடத்தின் சம்பவங்கள் போராட்ட வாழ்வுக்குள் மிச்சம் விட்டு சென்றது எனனவென்பதை இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிலத்திலிருந்து வெளியேறிவர்கள் ஏங்கும் நினைவுகள், இந்த முடிவுறாத முகாரி.
மற்றவர்கள் போல வெளியிருந்து பார்க்காமல் போராட்டத்தின் முக்கிய பங்குதாரியாக பார்த்த பாஸ்கரனின் நினைவுகளில் போலித்தனமற்றது. ஆயுதப் போராளிகள் , அரசாங்கத்தின் மற்றும் இராணுவ விடயங்கள் பாரபட்சமற்று நினைவு கூறும்போது புனிதமாக எதுவுமில்லை என்பது புலனாகிறது. இலங்கை அரசாங்கத்தால் முடிவுறாக முகாரி நூல் சுங்கத்தில் தடுக்கப்பட்டது என்பதால் புத்தகத்தை பற்றி நான் அதிகம் பேசவேண்டியதல்ல.
ஈழத்தின் சிறந்த தமிழ்க்கவிஞரான மு பொன்னப்பலத்தின் முகவுரை மிகவும் அழகான கவிதையாக இருக்கிறது. முடிவுறாக முகாரி கவிதை நூலை வாசிப்பவர்களை முகவுரை கைப்பிடித்து அழைத்து செல்லும்.
