தமிழினி என்ற சிவகாமி போரின் பின்னர் கைதாகி விடுதலையாகும் வரையில் அவர் ஒரு பெண்போராளி என்றே பரவலாக அறியப்பட்டிருந்தார். வெளியே வந்த பின்னர் பதிவுகளில் அவர் எழுதிய சிறுகதையின் மூலம் அவருடைய இலக்கிய முகம் தெரிந்தது. அவரைப்போன்ற பல பெண்கள் போரில் தமது இலக்கிய– குறிப்பாக கவிதை முகத்தை தொலைத்திருந்தமையும் அறியக்கூடியது. எனினும் அவர்களின் கவிதைகள் போர்க்காலத்தில் பதிவான வெளிச்சம் போன்ற இதழ்கள் பரவலாக புகலிட நாடுகளில் கிடைக்கவில்லை. தமிழினியின் இலக்கிய முகத்தை அழுத்தமாக பதிவுசெய்துள்ள இந்த ஆக்கம், அவரிடமிருந்த இலக்கியத் தேடலை மேலும் அறியும் தூண்டுதலைத் தருகிறது.
முருகபூபதி – மெல்பன்.
