Quantcast
Channel: Noelnadesan's Blog
Viewing all articles
Browse latest Browse all 736

மெல்பனில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வெள்ளிவிழா

$
0
0

CSEF JAFFNA Dict Students

இலங்கையில் முன்னர் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களை குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்த கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் உதவி வழங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் தனது கால்நூற்றாண்டு கால பணிகளை தொடர்ந்தவாறு அதன் வெள்ளிவிழாவை மெல்பனில் நடத்தவிருக்கிறது.
இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் போரினால் பாதிப்புற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களுக்கு மாதாந்தம் நிதியுதவி வழங்கி அவர்களது கல்வி வளர்ச்சிக்கு உதவிய மாணவர் கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட புனவர்வாழ்வு தொண்டு நிறுவனமாகும்.
கடந்த காலங்களில் இந்நிதியத்தின் உதவிகளைப்பெற்று கல்வியை இடைநிறுத்தாமல் தொடர்ந்த மாணவர்கள் பலர் பல்கலைக்கழகங்களிலும் பிரவேசித்து பட்டதாரிகளாகி சிறந்த தொழில் வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.
தொடர்ந்தும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மேலும் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு உதவி வரும் இக்கல்வி நிதியம் நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் இயங்கிவருகிறது.
இந்நிதியத்தின் 25 வருட நிறைவு வெள்ளிவிழா நடப்பாண்டு நிதியத்தின் தலைவி திருமதி அருண். விஜயராணியின் தலைமையில் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-09-2014) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மண்டபத்தில் Noble Park Community Centre ( Memorial Drive, Noble Park , Vic – 3174) நடைபெறவிருக்கிறது.
ஒன்று கூடல் தகவல் அமர்வாக நடைபெறவுள்ள வெள்ளிவிழாவில் இதுவரைகாலமும் கல்வி நிதியம் மேற்கொண்ட பணிகளைப்பற்றிய ஆவண ஒளிப்படக்காட்சியும் காண்பிக்கப்படவிருக்கிறது.
வெள்ளிவிழாவை முன்னிட்டு நிதியத்தின் தலைவர் திருமதி அருண். விஜயராணி பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளார்.
பிரார்த்தனை செய்யும் உதடுகளுக்கு மேலாக சேவை செய்யும் கரங்கள் புனிதமானவை
இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களையும் குடும்பத்தின் மூல உழைப்பாளியையும் இழந்த ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் 1988 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் மெல்பனில் தொடங்கப்பட்ட எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் 1989 முதல் இம்மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாக இயங்கிவருகிறது.
CSEF VAVUNIYA Dist Students
பயணம் செய்வதற்கு ஆரோக்கியமான பாதையை வகுப்பது கடினமானது. அவ்வாறு வகுத்த பாதையில் பயணிப்பது இலகுவானது. இத்தகைய ஒரு நல்லதொரு கல்வி சார்ந்த சமூகப் பணியை 25 ஆண்டுகளுக்கு முன்னர் திரு. முருகபூபதி அவர்கள் ஆரம்பித்தபொழுது அவருடன் இணைந்து சேவையாற்றிய நிதியத்தின் ஆரம்பகால உறுப்பினர்களையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்தவாறு இதுவரைகாலமும் கல்வி நிதியத்திற்கு பல்வேறு வழிகளிலும் உதவிய அன்பர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மாவட்டங்கள் அனைத்திலும் எமது நிதியத்தின் பணி முடிந்தவரையில் விஸ்திரிக்கப்பட்டிருந்தமையினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறந்த பயனைப்பெற்றுள்ளனர்.
எமது நிதியத்தின் சக்திக்குட்பட்டவாறு இலங்கையில் சுநாமி கடற்கோள் அநர்த்தத்தின்பொழுதும் 2009 இல் போர் உக்கிரமாகி மக்கள் அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்தவேளையிலும் உதவிகளை ஆக்கபூர்வமாக வழங்கியிருக்கின்றோம்.
அத்துடன் முன்னூறுக்கும் அதிகமான முன்னாள் போராளி மாணவர்களை புனர்வாழ்வு முகாம்களிலிருந்து மீளச்செய்து அவர்களின் தொடர்ச்சியான கல்விக்கும் எமது நிதியம் உதவியிருக்கிறது. – தொண்டாற்றிய எமது அன்பிற்கினிய அன்பர்களுக்கும் இச்சந்சதர்பத்தில் எமது நன்றியை தெரிவிக்கின்றோம். நிதியத்தின் உதவியைப்பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைககழகம் பிரவேசித்து தமது கற்கை நெறிகளை பூர்த்தி செய்து பட்டதாரிகளாக வெளியேறியிருப்பதுடன் சிறந்த தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுள்ளனர். பலர் வெளிநாடுகளுக்குச்சென்று தமது புதிய புகலிட வாழ்வைத் தொடருகின்றனர்.
‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்று எமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில் இலங்கையில் நீடித்த போரினால் இளம்வயதிலேயே தமது பெற்றவர்களை இழந்த மாணவர்கள் கல்வியை உரியமுறையில் தொடருவதற்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடுமையாக உழைத்திருக்கிறது என்பதற்கு அதன் தங்கு தடையற்ற நீடித்த சேவையே முன்னுதாரணமாகியிருக்கிறது. எனவே இன்றைய வெள்ளிவிழா கல்வி நிதியத்திற்கு இதுவரை காலமும் உதவிய இரக்கமுள்ள அன்பர்களுக்கும் இனிவரும் காலத்தில் நிதியத்தில் இணந்து பணியாற்றவிருப்பவர்களுக்கும் சிறந்த செய்தியை வழங்கும் என்றே கருதுகின்றோம்.
இன்று நடைபெறுகின்ற நிதியத்தின் வெள்ளிவிழாவினை திறப்பட நடத்துவதற்கு ஆதரவு நல்கிய அன்பர்களுக்கும் வர்த்தக ஸ்தாபன இயக்குநர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம். கல்விப்பணிக்கு உதவுவதில் நாமனைவரும் இணைந்திருப்போம்.
வெள்ளி விழா தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு நிதியத்தின் தலைவர் திருமதி அருண். விஜயராணி (03) 949 97 176
kalvi.nithiyam@yahoo.comhttp://www.csefund.org



Viewing all articles
Browse latest Browse all 736

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!