நடேசன்
நாம் ஒவ்வொருவரும் தாய் தந்தை மனைவி ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்வர்களாக இருக்கிறோம். இதை விட எனது பிறந்த நாடு அடைக்கலம் கொடுத்த நாடு என பட்டியல் நீள்கிறது. இதைவிட எமது புலன்களுக்கு தெரியாமல் எமது சாதாரண உணர்வுகளுக்கு அறியமல் மனித குலத்தின் மூதாதையர் ஒவ்வொரு துறையிலும் எமக்கு ஏணியாக இருநது இருக்கிறார்கள். எம்மை அறியாமல் அவர்களின் தோள்களில் தொற்றிக்கொண்டு வலம் வருகிறோம்.
எனது வாழ்க்கையில சந்திக்காமல் பார்த்திராமல்; கடமைப்பட்டு இருக்கும் கதை
நான் கடமைப்பட்ட பெண் பிரபல விஞ்ஞானி அவரது பெயர் மில்ரெட் ரெப்ஸ் ரொக்(Mildred Rebstock). அமரிக்காவில் மிச்சிக்கனில் வாழ்ந்த அந்த பெண்ணுக்கும எனக்கும என்ன தொடர்பு?
அவுஸ்திரேலியாவில் ஆங்கிலப்பத்திரிகையை வாசிக்கும் போது நான் புகழடைந்தவர்களின் மரணத்தை அறிவிக்கும் பகுதியை வாசிப்பது வழக்கம். அதில் பிரபலமானவர்களை விட சாதனையாளர்கள் மரணிக்கும் போது அவர்களை பற்றிய விபரங்களை எழுதியிருப்பார்கள். பல சாதனையாளர்களை மரணித்த பின்புதான் அந்த பகுதியை வாசித்து அறிந்திருக்கிறேன் கடந்த ஏப்பிரல் மாதத்தில் ஒரு அமரிக்க பெண்ணின் மரணத்தை அதில் அறிவித்திருந்தார்கள். அதிலும் மருத்துவம் என் சிறிய தலையங்கத்தின் கீழ் போடப்பட்டிருந்தாதால் அதை வாசித்தேன். 91 வயதில் இறந்திருந்த அந்த அமரிக்க பெண்ணுக்கு என் மனதளவில் நன்றி சொல்லிக்கொண்டேன்.
குளோரோமெசிரின் என்ற அன்ரிபயரிக் ஆரம்பத்தில் நுண்ணுயிரான பக்டீரியாவில் இருந்த தயாரிக்கபட்டது. மிகக் குறைவாகவே பெறப்பட்ட இந்த அன்ரிபயரிக் தைபோயிட் நோய்க்கு மருந்தானது.. இந்த மருந்தை பெருமளவில் செயற்கையாக தயாரிக்க பாக்-டேவிஸ் (Park –Davis) என்ற கம்பனிக்கு உதவியது அங்கு விஞஞானியாக வேலை செய்து வந்து மில்ரெட் ரெப்ஸ்ரொக் ((Mildred Rebstock) பெண்ணாகும். செயற்கை முறையில் பெருமளவு தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் கொல்லி இந்த குளோரோபனிக்கலாகும்.
இந்த விஞ்ஞானிக்கு விசேட பரிசு அவரது சாதனைக்காக அமரிக்க ஜனாதிபதி ஹரி ருமனால் (Harry Truman ) வழங்கப்பட்டது. மருத்துவத்தில் மட்டுமல்ல இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. அந்த காலத்தில் மிக குறைவான பெண்களே விஞ்ஞானிகளாக இருந்தார்கள். 1950 ஆண்டுகளில் உலகில் விஞஞானிகளில் பெண்களின் வீதம் மூன்றே சதவீதமாகும்
இந்த குளோரோமைசின ஆரம்பத்தில் அதாவது 67ம் ஆண்டுவரையும் பல வியாதிகளின் மருந்துவத்துக்கு பயன்பட்டாலும் பின்பு இரத்தத்தில் சோகையை உருவாக்குவதால் தைபோயிட்டுக்கும் மடடுமே பாவிக்கப்பட்டது. தற்பொழுது தைபொயிட்டுக்கும் சிறந்த மருந்துகள் வந்துவிட்டன. மிருகவைத்தியத்தில் கூட காது நரம்பை பாதிப்பதால் விலத்திவைக்கப்பட்டுள்ளது.அத்துடன் பாக்-டேவிஸ(Park –Davis) பைசர் என்ற மருந்து கம்பனியால் (Pfizer)சுவீகரிக்கப்பட்டது
என்னைப் பொறுத்தவரை நான் உயிர் வாழ்வதற்கு காரணமாக இந்த குளோபனிக்கல் இருந்ததின் மூலம் இந்த பெண் விஞ்ஞானியை நினைவு கூறவிரும்புகிறேன்
